Thursday, February 19, 2026

TODAY GOLD RATE : (03-10-2025) தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்…

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி { நேற்று முன்தினம் } ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று {02.10.2025 } காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்தது. அதாவது, ஒரு கிராம் ரூ.10. 950-க்கும், ஒரு சவரன் ரூ.87.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,840 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. அதாவது, கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.161-க்கும் கிலோவுக்கு 3,000 குறைந்து பார் வெள்ளி 1,61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News