Friday, January 23, 2026

கண்ணாமூச்சி விளையாடும் தங்கத்தின் விலை (03-10-2025)..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி { நேற்று முன்தினம் } ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று {02.10.2025 } காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்தது. அதாவது, ஒரு கிராம் ரூ.10. 950-க்கும், ஒரு சவரன் ரூ.87.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி, காலையில் கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,840 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,900 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 87,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்றும், இன்றும் ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது..

Related News

Latest News