Friday, January 16, 2026

TNPSC தேர்வர்கள் நோட் பண்ணிக்கோங்க! அப்டேட் செய்யப்பட்ட’ Good News’!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், அரசு வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் TNPSC தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த வரிசையில், 2025-ம் ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பில், முதற்கட்டமாக 3,935 காலிப் பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

இந்த தேர்வின் மூலம், விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற பல்வேறு முக்கியமான பதவிகள் நிரப்பப்படவுள்ளன. மிக முக்கியமாக, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே இந்த தேர்வை எழுத முடியும் என்பதால்தான், TNPSC தேர்வுகளில் அதிகமாக விண்ணப்பம் Group 4 க்கே வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் இல்லாமல் – ஒட்டுமொத்தமாக 2025-ம் ஆண்டுக்கு TNPSC மூலமாக 7 முக்கிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன, அதில் Group 1, 2, மற்றும் Group 4 ஆகியன முக்கிய இடம் பிடித்துள்ளன. Group 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே மே 24-ஆம் தேதி வரை பெறப்பட்டு விட்டன.

இதற்கிடையில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது – கடந்த ஆண்டு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாகவே அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார் – தேர்வு முடிந்து கலந்தாய்வு நடைபெறும் வரை, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகள் இந்த தேர்வு மூலமாக வரும் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் மனம் நோகாகாமல், முழுமையாக தயாராகி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related News

Latest News