திருவள்ளூரில் திரு.வி.க பேருந்து நிலையம் உள்ளது இந்த கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பேருந்திற்காக இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருக்க கூடிய சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதினால் பயணிகளுக்கு பாதுகாப்பு கிடையாது என்றும் இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.