Sunday, May 11, 2025

அரசு மருத்துவமனையில் படுத்து தூங்கிய நாய் : கண்டுகொள்ளாத பணியாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு இந்த அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் தெரு நாய் ஒன்று படுத்து தூங்கியுள்ளது. இதனை அங்கு பணியில் இருந்த மருந்துவர்களோ, செவிலியர்களோ கண்டுகொள்ளவில்லை.

இந்த நாய்கள் நோயாளிகளை கடிக்கும் நிலை உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news