மழைக்காலங்களில் மின்சார வாகனங்களை பாதுகாப்பது எப்படி?

200
Advertisement

2021ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுக்குள்ளாக, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

மழைக்காலம் தொடங்கி விட்டதால், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, மின்சார வாகனங்களை சரியான முறையில் பராமரிப்பது அவசியம்.

காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதத்தினால் துரு பிடிப்பது மற்றும் எலிகள் வயர்களை கடிப்பது போன்ற பிரச்சினை ஏற்படலாம். மேலும், சார்ஜ் போடும் போது, மின்சாரத்தில் தண்ணீர் பட்டு விட்டால் ஷாக் அடிக்கும் அபாயமும் நிலவுகிறது.

இது போன்ற சிக்கல்களை தவிர்க்க, ஈரமில்லாத, காற்றோட்டமுள்ள, மேற்கூரையுள்ள இடங்களில் மின்சார வாகனங்களை நிறுத்த மற்றும் சார்ஜ் செய்ய வேண்டும். தண்ணீர் புகாத waterproof resistant பைக் கவர்களை உபயோகிப்பது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும்.

தண்ணீர் தேங்கிய சாலைகளில் பயணிப்பது உடனடியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அதிக தண்ணீருக்குள் செல்வதை தவிர்ப்பதும் அப்படி தவிர்க்க முடியாத பயணத்திற்கு பின் வாகனத்தை service செய்வதும் அவசியம்.

லித்தியம் பேட்டரிகளில் இயங்கும் மின்சார வாகனங்கள், உச்சகட்ட வெயில் மற்றும் குளிரினால் செயல்பாட்டு தடைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், பேட்டரி சரியான நிலையில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறும் பொறியியல் நிபுணர்கள், மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதால் பாதுகாப்பான மின்சார வாகன அனுபவத்தை பெற முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.