சுவிஸ்சர்லாந்து பூலோகத்தின் சொர்கம் என்பது மட்டுமல்ல இங்கு இன்னுமோர் ஆச்சர்ய சமாச்சாரம் உண்டு. அதற்க்கு பெயர் டைம் பேங்க்.
இந்த டைம் பாங்கில் நீங்கள் உங்களது அக் கவுண்ட்டை ஓபன் செய்துகொண்ட பின்னர், அந்த வங்கியால் முதுமையால் நடமாடமுடியாமல், உதவி தேவைப்படுவோரின் விலாசம் தரப்படும். அங்கு சென்று நீங்கள் உங்களது சேவையை அவருக்கு செய்ய வேண்டும்.
உங்களது மொத்த சேவை நேரமானது உங்களது சேமிப்பாக பராமரிக்கப்படும். பின்னர் நீங்கள் தனிமையாலோ, வயோகத்தாலோ உதவி தேவை படும் நிலையில் இருக்கும் போது இந்த வங்கியிலிருந்து ஆள் அனுப்புவார்கள்.
அவர் உங்களுக்கு தேவையான சேவையை செய்து அவருக்கான நேர சேமிப்பை தொடருவார். இது அனைவருக்கும் பயனுள்ள திட்டமாக பார்க்கப்படுகிறது.நம்ம ஊரிலும் இதுபோல TIME BANK இருந்தால் பலர் பயனடைவார்கள் தானே…