குடிநீருக்காக மாதம் 1.5லட்சம் செலவிடும் பிரபல TIKTOKER

393
Advertisement

குடிநீருக்காக மாதந்தோறும் ஒருவர் லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்வது குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்க மாடீர்கள் .

மிக உயர் தரத்திலான குடிநீரை வாங்குவதற்காக மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் செலவு செய்வதாக டிக்-டாக் பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ராயன் என்ற டிக்-டாக் பயனாளர் தான் இந்த அதிரடி நிகழ்வுக்கு சொந்தக்காரர்.

இவருக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீர் அருந்துவது பிடிக்கவில்லையாம் இதனால், இயற்கையான தண்ணீரை பெரும் செலவு செய்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

தண்ணீரின் சுத்தம், மட்டுமல்லாமல் இயற்கை பாதுகாப்பு குறித்தும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ராயன். இதனால், தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கும் நிறுவனத்திடம் இருந்து தான் அவற்றை வாங்குகிறார்.

தண்ணீர் குடித்து, முடித்த பிறகு அந்த பாட்டில்கள் அனைத்தையும் மறுசுழற்சிக்கு ராயன் அனுப்பி வைத்து விடுகிறார்.

இயற்கையை நேசிக்கும் ராயன் வீட்டில், பாட்டில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவே 4 ஃபிரிட்ஜ்கள் உள்ளன.

கண்ணாடி பாட்டில்களில் குடிநீரை விற்கும் VOSS என்ற நிறுவனத்திடம் இருந்துதான் இவர் தண்ணீர் வாங்கி வருகிறார்.

இதற்காக, மாதந்தோறும் இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை செலவு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இது இந்திய மதிப்பில் சுமார் .1.5 லட்சம் ருபாய் ஆகும்.

என்னதான் தூய்மையான குடிநீர் குடிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வதா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அதற்கு பதில் அளித்த ராயன் , “நான் எப்போதும் தூய்மையான தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

ஆனால், நீங்களெல்லாம் நரகத்தில் இருப்பதை போல அசுத்தமான தண்ணீரை குடித்து வருகிறீர்கள்.

உங்களை போல என்னால், குழாய் தண்ணீரை எல்லாம் குடிக்க முடியாது.

கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே நான் விரும்பி குடிப்பேன். எனக்காக நான் செய்து கொள்ளும் ஒரே விஷயம் அதுதான்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.