Monday, January 20, 2025

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ‘டிக்டாக்’ செயலி

‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியாவில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் அரசு ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் ‘டிக்டாக்’ செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து டிக் டாக் நிறுவனம் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Latest news