லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் முதல்காட்சிக்கு சிங்கிள் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது. மல்டிபிளக்ஸில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. கூலி படத்தின் டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.