Thursday, June 5, 2025

தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்! மொத்தம் இத்தனை கோடியா?

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை (05-06-2025) வெளியாகிறது. இப்படத்தில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. தக் லைஃப் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் ரூ.10 கோடியை தாண்டியிருக்கிறது. இதுவரை சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news