Saturday, June 7, 2025

இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூல் செய்த தக் லைப்

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். 

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான ‘தக் லைப்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கமல்ஹாசனின் முந்தைய படமான ‘இந்தியன் 2’ படத்தை விட வசூல் குறைவு என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news