இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் கடந்த ஏப். 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘துடரும்’. மோகன்லால் – ஷோபனா நடிப்பில் நடித்த இப்படம் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் துடரும் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற மே 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.