சீனாவின் 80வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு, நேற்று பெய்ஜிங்கின் தியான்மென் சதுக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் சி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றினர்.
இந்த அணிவகுப்பில் உரையாற்றிய சி ஜின்பிங், ‘உலகம் அமைதி மற்றும் போர் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சந்திப்பதாகவும் சீனாவை யாராலும் தடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூடினார். அவரது இந்த உரை, சீனாவின் பலத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், உலக அரசியலுக்கு சவால் விடுவதாகவும் இருந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்வினை கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்.
சமூக ஊடகத்தில் அவர், ‘சி ஜின்பிங், புடின், கிம் – மூவரும் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்கின்றனர்’ என்று குற்றம்சாட்டினார். மேலும், ‘இந்த அணிவகுப்பு மிகப் பெரிய அளவில் இருந்தாலும், முழுமையான திட்டமிட்ட அரசியல்’ என்றும் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியிருக்கிறார்.
உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த அணிவகுப்பில், மூன்று சக்திவாய்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து தோன்றியது, சர்வதேச உறவுகளுக்குள் புதிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டு, அமெரிக்கா-சீனா இடையேயான போட்டி மேலும் தீவிரமடையும் வாய்ப்புக்கு அறிகுறியாக இருக்கிறது.