பல செயற்கையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், இயற்கையாக கிடைக்கும் அழகு அளிக்கும் தன்னிறைவே தனி தான்.
இதற்காக ஒரு மூன்று எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சிறப்பான பலன்களை பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
இயல்பாகவே, தூங்கி எழுந்த உடன் காலையில் முகம் நல்ல புத்துணர்வுடன் தோற்றமளிக்கும். அதை அப்படியே பாதுகாக்க, முகம் கழுவி துடைத்த பின் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது தேவையற்ற கொழுப்பை கரைத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.
உள்ளிருந்து நச்சுக்கள் நீங்கிய பின் தோலுக்கு இயற்கையான பொலிவு அதிகரிப்பதை கண்கூடாக காண முடியும். மேலும், கூடுதல் பயனாக உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு மேம்பட்ட ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும்.
சருமத்தை வெகுவாக பாதிப்பதில் வெயில் மற்றும் மாசு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், வெளியில் செல்லும் போது முகத்தை துணியால் மூடிக் கொள்வது மற்றும் புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் SPF அளவு 30க்கு மேல் இருக்கும் sunscreen க்ரீம்களை முறையாக பயன்படுத்துவது சரும பாதிப்புகளை வெகுவாக குறைத்து, முகப்பொலிவை அதிகரிக்கும் என தோல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.