Thursday, January 15, 2026

பூமியை நோக்கி வரும் “மூன்று பெரும் விண்கற்கள்”! ஹிரோஷிமாவை விட பேராபத்து !

அமெரிக்காவின் Fox News மற்றும் Astronomy and Astrophysics இதழில் வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு… அதிர்ச்சி அளிக்கின்ற தகவலை வெளியிட்டுள்ளது.

 2020 SB, 524522 மற்றும் 2002 CL1  எனப் பெயரிடப்பட்ட மூன்று பெரும் விண்கற்கள் —பூமியுடன் மோத வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கற்கள் தற்போது சூரியனைச் சுற்றி விண்வெளியில் வீனஸ் கிரகத்துடன் ஒரே பாதையில் பயணிக்கின்றன. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை சூரிய ஒளியில் மறைந்திருப்பதால் பூமியிலிருந்து உள்ள தொலைபேசி கோபுரங்கள் மற்றும் தொலைநோக்கிகள் மூலம் அவற்றைப் பார்க்கவே முடியாது.

இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சிறிய அளவிலான ஈர்ப்பு மாற்றம் கூட, இந்த விண்கற்கள் பூமியை நோக்கி திருப்பப்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த விண்கல் பூமியைத் தாக்குமாயின், 3 கிலோமீட்டர் அகலத்தில் பெரிய பள்ளத்தை உருவாக்கும், அதிலிருந்து வரும் சக்தி, ஹிரோஷிமா அணுகுண்டை விட லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்!

இதனால் வீனஸ்க்கு எந்த வித ஆபத்துமில்லை, ஆனால் பூமிக்கு இது ஆபத்துதான்”என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிலி நாட்டில் உள்ள ரூபின் ஆய்வகத்தில் இந்த வகை ஆபத்துக்களை கண்காணிக்கின்றனர். ஆனால் அதுவும், விண்கல் தாக்குவதற்கு  சில வாரங்களுக்கு முன் தான் இதை கண்டுபிடிக்க முடியும். அதாவது, முழுமையான எச்சரிக்கை நேரம் வெறும் 2 முதல் 4 வாரங்கள் மட்டுமே!

இந்த ஆபத்தை முற்றிலும் தடுக்கும் ஒரே வழி, வீனஸுக்கருகே ஒரு சிறப்பு விண்வெளி திட்டத்தை உருவாக்குவதே.

இந்த செய்தி, நாம் வாழும் பூமி எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவுபடுத்துகிறது. இது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு தேவையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

Related News

Latest News