தஞ்சை அருகே உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த மூன்று மான் கொம்புகளை வனத்துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் மேலவீதி கவிசந்து பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் சட்டவிரோதமாக மான் கொம்புகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், பிரபாகரன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூன்று மான் கொம்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததோடு, பிரபாகரனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
