சென்னை, கண்ணகி நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உறங்கும் பொழுது கையில் வைத்திருந்த செல்போன்கள் திருடப்படுவதாக தொடர்ச்சியாக பல வீடுகளில் இருந்து கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்து கொண்டிருந்தது .
இது குறித்து கண்ணகி நகர் குற்றப்பிரிவு போலீசார் புகாரை பெற்று விசாரித்து வந்தனர். போலீசார் விசாரணையில் கதவை திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருக்கும் வீடுகளில் புகுந்து செல்போன்களை திருடி சென்ற நபர்கள் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த புலி(எ)வசந்தகுமார், கௌதம்,ராஜன், என்ற மூன்று நபர்கள் தெரிய வந்தது.
பின்னர் கண்ணகி நகர் குற்றப்பிரிவு போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஏழு செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்