Sunday, April 20, 2025

மராத்தி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் – ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் வசிக்கும் மக்கள் மராத்தி பேச மறுத்தால் அவர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய ராஜ் தாக்கரே, “மும்பையில் வந்து மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களின் கன்னத்தில் அறை கொடுப்போம்.

நாளை முதல், ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் கவனிப்போம். மராத்தி மொழியில் பேசுகிறார்களா என்று பார்ப்போம். அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். இதிலிருந்து தங்கள் கட்சி பின்வாங்காது எனவும் அவர் கூறினார்.

Latest news