பொங்கலை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 224 நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் நியாயவிலை கடைகளில் மார்ச் 31ம் தேதிக்குள் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.