திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறைக்காக திருச்சியிலிருந்து தன்னுடைய குடும்பத்துடன் மனோ சித்தார்த் என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து மீண்டும் திரும்பிய நிலையில் அங்குள்ள சாக்லேட் கடை முன்பு அவர் வாகனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது கடையின் உரிமையாளருக்கும் வாகனத்தை நிறுத்திய சித்தார்த்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சித்தார்த்தை விரட்டி சென்று வாகனத்தை தாக்கியுள்ளனர். இதையடுத்து வாகனத்தை தாக்கிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.