விஜய்யின் 12 நிமிட பேச்சில் இந்த வார்த்தையே அவர் வாயில் இருந்து வரவில்லையே..!

கரூர் சம்பவம் நிகழ்ந்து 72 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கி இருந்த நிலையில், கூடுதலாகவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், தமிழ்நாடும், புதுச்சேரியும் வேறு வேறு கிடையாது. 1977ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், 1974லேயே புதுச்சேரியில் ஆட்சி அமைத்துவிட்டார். தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்கக் கூடாது.

அதேபோல் வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் புதுச்சேரி அரசு நடந்துள்ளது.

புதுச்சேரி அரசுக்கும், சிஎம் சார்-க்கும் மனப்பூர்வமான நன்றி. இதனை பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

புதுச்சேரி மக்கள் திமுகவை மட்டும் நம்பிவிடாதீர்கள். அவர்கள் உங்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி பிரச்சனைகளை பேசும் போது மத்திய அரசு என்று குறிப்பிட்ட விஜய், ஒருமுறை கூட பாஜகவின் பெயரை சொல்லவில்லை. ஆனால் தமிழக அரசு என்று சொல்வதற்கு பதிலாக திமுக அரசு என்று விஜய் விமர்சித்தார். இதனால் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related News

Latest News