தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சத்தில் உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்தாண்டில் மட்டும் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தற்போது 3 ஆயிரத்து 400 டாலராக உள்ள ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இந்தாண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்து 600 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுபோல அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் இந்த விலை 3 ஆயிரத்து 800 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவை பொருத்தவரை 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்றும் அடுத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.