Sunday, April 20, 2025

‘வெறும்’ 4 பந்துக்கு ரூ.16 கோடி IPLலோட ‘பட்டத்து’ இளவரசர் இவருதான்!

IPL தொடர் தற்போது விறுவிறுப்பாக இந்தியாவின், முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெரிய ஸ்கோர்கள் அடிக்கப்படுவதால், ஆரம்பத்திலேயே தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கம்போல மும்பை முதல் போட்டியை சாமிக்கு விட்டுவிட, சென்னை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக RCB பர்ஸ்ட் போட்டியையே Win செய்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல மார்ச் 24ம் தேதி நடைபெற்ற டெல்லி-லக்னோ போட்டி, IPL வரலாற்றின் ஆகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

ஹைதராபாத் அணியோ இந்த சீசன்ல நிச்சயம் 300 ரன்களை அடிப்போம் பாஸ் என, சபதம் எடுத்து வேலை தீயாய் செய்து வருகிறது. இதனால் ஒவ்வொரு போட்டியிலுமே அனல் பறக்கிறது. இந்தநிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை, பட்டத்து இளவரசர் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்னை-மும்பை இடையிலான போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா, 18வது முறையாக டக்அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் இல்லாமல் மும்பை, சென்னைக்கு எதிராக விளையாடியது.

ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பை உணராமல், ரோஹித் வெறும் 4 பந்துகளில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். பின்னர் பீல்டிங் செய்யவும் வரவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை மும்பை களமிறக்கியது.

2 ICC கோப்பைகளை வென்றாலும் கூட, ரோஹித் பெரிதாக ரன்கள் எதுவும் குவிக்கவில்லை. அண்மைக் காலமாக பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஒவ்வொரு பிளேயரும் வாங்குன காசுக்கு வஞ்சம் இல்லாம உசுரக் குடுத்து விளையாடுறாங்க.

ஆனா ரோஹித் ரன்னும் அடிக்க மாட்றாரு, பீல்டிங்கும் வரல. இவருக்கு 16 கோடி குடுத்ததுக்கு, இஷான் கிஷனைத் தக்க வச்சுருக்கலாம். வெறும் 4 பந்துக்கு 16 கோடி ரூபாய். இந்த IPL ஓட பட்டத்து இளவரசர் ரோஹித் தான்,” இவ்வாறு விதவிதமாகக் கிண்டலடித்து வருகின்றனர்.

மும்பை அடுத்ததாக மார்ச் 29ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை, அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், எந்த அணி முதலில் வெற்றிப்பாதைக்கு திரும்பப் போகிறது? என, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest news