இந்த காரணம்தான் நீங்க கருத்தரிக்க தடையா இருக்கு!!!!!! இனி careful லா  இருங்க……

243
Advertisement

பெண் என்ற வார்த்தை முழுமை அடையும் காலம் தான் அவள் கருத்தரிக்கும் காலம். கருத்தரிப்பதில்,  பல பிரச்சனை  சந்தித்துவரிங்களா , கவலைய விட்டுட்டு இந்த விஷயங்கள்ல கவனம் செலுத்துங்க போதும்.

மாறிப்போன வாழ்க்கை முறையால் மலட்டு தன்மை என்பது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.  பல கனவுகளுடனும் , அசைகளுடனும்  திருமண வாழ்க்கையில் இணையும் தம்பதிகள்.  சில மாதங்கள் கடந்தாலே  அனைவரும் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி “விஷேஷம் ஏதும் இல்லையா?” அப்படி குழந்தை பிறக்க தாமதித்தால் பெரியவர்கள்  பழியை பெண் மீது போட்டு விடுவார்கள் ,  எவ்ளோ டெக்னாலஜி வளர்ந்தாலும் இந்த வழக்கம் இன்னும் நிலைத்து கொண்டுத்தான் வருகிறது. ஒரு பெண் கருத்தரிக்க தாமதமாகிறது என்றால், பெண்ணுக்கு மட்டும் பங்கல்ல  ஆண்களுக்கும் பங்குண்டு. ஆண்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் பெண்களுக்கு இந்த 7 விஷயங்கள் தான் கருத்தரிக்க தடையாக உள்ளது , அது என்னவென்றால்

முதலாவது எண்டோமிட்ரியோஸிஸ் இது 25 முதல் 40 வயதுடைய இளம் பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. கருப்பையின் உட்புறத்தை வழக்கமாக கொண்டிருக்கும் எண்டோமெட்ரியம், பொதுவாக  கருப்பைகள் மற்றும் பெண்ணுறுப்பு  மேற்புறத்தில் காணப்படும் தசை சேதத்தால்  எண்டோமெட்ரியோசிஸ் ஏற்படுகிறது ,இது இடுப்பு வலி,  வலி மிகுந்த உடலுறவு , மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்  என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது  நார்த்திசுக்கட்டிகள் இது பெண்களிடையே  காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும் ,இதில் அறிகுறிகள் வெளிப்படாது, இன்னும், அரிதான நிகழ்வுகளில், அவை புற்றுநோயாக மாறலாம்.
என்று கருதப்படுகிறது.   

மூன்றாவனது தைராய்டு இந்திய தைராய்டு சங்கத்தின் அறிக்கையின் படி premenstrual syndrome அதாவதுப மாதவிடாய்  பிரச்சனை உடைய 70%பெண்களுக்கு தைராய்டு செயலிழப்பு உள்ளது என்றும் இதனால் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது  என்றும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

\

நான்காவது பாலோப்பியன் குயாய் அடைப்பு , கருமுட்டை மற்றும் விந்தணுக்களை கடத்துவதற்கு ஃபலோபியன் குழாய்கள் தேவை.இதில் அடைப்பு ஏற்பட்டால் இயற்கையாக கருத்தரிப்பது சத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஐந்தாவது இடுப்பு அழற்ச்சி நோய் , இதற்க்கு பல சிகிசிச்சை உள்ளது ஆனால் சரியான நேரத்தில் சிகிசிச்சை பெறவில்லை என்றால் மலட்டுத்தன்மைக்கு வழுவகுக்குமாம்.

ஆறாவது பாலிசிஸ்டிக் ஓவரி  சிண்ட்ரோம் அதாவது pcos , பெரும்பாலும் PCOS பாதிப்பிருக்கும் நிலையில், இந்த பைகள் முட்டையை வெளியிட முடியாது,  இதனாலும் கருத்தரிப்பதில் சிக்கலுண்டு என்று சொல்லப்படுகிறது.

 ஏழாவதாக புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால், இதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் ,அதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் கருவுறாமை. ஆண் , பெண் இருவருக்குமே , இந்த பழக்கங்கள்  ,கருவுற்றாமையை ஏற்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.