பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
அண்மையில் அவர் தயாரித்த பேட் கேர்ள், மனுஷி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தணிக்கைத் துறையிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இத்திரைப்படங்கள் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த இரு திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்நிலையில் தனது GRASS ROOT திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் இனி படத்தை தயாரிக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து வெற்றிமாறன் பேசுகையில், “பேட் கேர்ள் திரைப்படம்தான் Grass root கம்பெனியின் கடைசி படம். அதற்குப் பிறகு கம்பெனியை மூடப் போகிறோம். இயக்குநராக இருப்பது மிகவும் சுதந்திரமானது. ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது. அதனால் இந்த முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.