இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட IPL தொடர், மீண்டும் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட் நிலவரப்படி பெங்களூரு, குஜராத், பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் Play Offக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி, லக்னோ என 3 அணிகள் போட்டி போடுகின்றன. இதனால் IPL தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் IPL தொடருக்கு அடுத்த சோதனை Corona வடிவில் வந்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் Travis Head கொரோனா தொற்றால், IPL போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். 2019ம் ஆண்டில் அறிமுகமான கொரோனா பெருந்தொற்று, ஒட்டுமொத்த உலகையுமே சில ஆண்டுகளுக்கு முடக்கிப் போட்டது.
தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளது. ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. இது வேகமெடுக்கும் பட்சத்தில், IPL போட்டிகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.