அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் இயக்குனர் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில், ஸ்பிரிட் படத்தை இயக்க இருக்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக முதலில் தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவர் படத்தில் இருந்து விலகி விட்டார்.
அவருக்குப் பதிலாக அனிமல் படத்தில் நடித்த, திரிப்தி டிம்ரியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த படத்தில் ரொம்ப Bold ஆன ரொமான்ஸ் காட்சிகள் இருந்ததால், தீபிகா இதில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அவர்மீது 100% நம்பிக்கை வைக்கிறேன். அந்த நடிகருக்கும் எனக்கும் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் கதையின் சில பகுதிகளை வெளியில் கூறியதன் மூலம், நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்? இளம் நடிகையை வீழ்த்துவதற்காக என் கதையை வெளியே கூறினீர்களா? இதுதான் உங்கள் பெண்ணியத்தின் அடையாளமா?
ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக பலவருட உழைப்பை எனக்கு பின்னால் வைத்திருக்கிறேன். அடுத்தமுறையும் இதேபோல செய்யுங்கள். வேண்டுமானால் முழு கதையையும் சொல்லுங்கள். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை,” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான தீபிகா படுகோனே குறித்து தான், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இப்படி தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இந்த விவகாரம், தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.