நாடோடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. காது கேட்காத, வாய் பேச முடியாதவராக இருந்தாலும் கூட அனைத்தையும் தாண்டி தென்னிந்திய சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். 50 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ள அபிநயா, அண்மையில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்ச் 9ம் தேதி அபிநயா- வெகேசனா கார்த்திக் இருவருக்கும் நிச்யயதார்த்தம் நடைபெற்றது. ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றில் கார்த்திக் வேலை செய்து வருகிறார். ஏப்ரலில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.
திருமண தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சிறுவயது நண்பரான கார்த்திக்கை 15 வருட காதலுக்கு பிறகு அபிநயா கரம் பிடிக்கிறார். தற்போது அபிநயா-கார்த்திக் இருவருக்கும் வாழ்த்துமழை குவிந்து வருகிறது.