Sunday, June 8, 2025

இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது : தீக்குளிக்க முயன்ற தொண்டர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் இன்று போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடப்பட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news