பிரபல தெலுங்கு நடிகருக்கு திருணம்!

199
Advertisement

தமிழ் ரசிகர்களுக்கு ‘Fida’ மற்றும் ‘ஸ்ட்ராபெர்ரி’ படங்களில் அறிமுகமான வருண் தேஜ் பல தெலுங்கு படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான நடிகராக உள்ளார்.

இவருக்கு தன்னுடன் இரு படங்களில் இணைந்து நடித்த லாவண்யா த்ரிபத்தியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வர, சுனில் ஷெட்டி, சமந்தா மற்றும் பல திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

வருண் தேஜ் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன நாகேந்திர பாபுவின் மகன் ஆவார். இவருக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.