சேலம் மாவட்டம் ஓமலூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். அப்படி செய்தால் அரசியலில் அவர் காணாமல் போய்விடுவார்.
எங்களின் கட்சியில் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், உள்ளனர். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். அதிமுக, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்சி கட்சி. இந்த ஒற்றுமை திருமாவளவனுக்கு பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்க வில்லை என்ற எரிச்சல்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டன. இந்த கூட்டணி 8 மாதத்துக்கு நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்வி இருக்கிறது. தேர்தலுக்காக இன்னமும் 8 மாத காலம் இருக்கிறது. அந்த 8 மாத காலத்தில் சிறப்பான கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.