அரியானா மாநிலத்தில் ஒரு பெண் ஒருவர், தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஹிமான்ஷி காபா என்ற அந்த பெண், சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “நான் மற்றும் என் சகோதரி சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது என் சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க சென்றோம். ஆனால், போலீசார் திருடனை கண்டுபிடிக்காமல், எங்களை மட்டுமே கேள்வி கேட்டனர்.
‘ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை இழந்த போது ஏற்படும் விளைவுகளை நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்’ என்றனர்.”
பின்னர், “அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார். இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது,” என்று அந்த பெண் கூறினார்.