Friday, August 15, 2025
HTML tutorial

வரும் தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தோடு வருவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக இன்று நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், மாணவர்கள் பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பிரிவினையை வளர்க்கும் சாதி, மதத்தின் பக்கம் செல்லக்கூடாது என்றும், ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதனை படைக்க வேண்டும் என்பது சாதனை கிடையாது எனவும் விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய விஜய், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்ககூடாது என்று பெற்றோர்களிடம் மாணவர்கள் கூற வேண்டும் என்றும், வரும் தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தோடு வருவார்கள், மக்களிடம் கொள்ளைடியத்த பணம்தான்அது எனவும் கூறினார். அனைவரும் தங்களுக்கான ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்றும், ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால்ததான் உலம் சுதந்திரமாக இருக்க முடியும் என்றும் விஜய் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News