பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : அதிமுக தன்னுடைய ஆட்சியில் நடந்த குற்றத்தை விசாரிக்காமல் குற்றவாளியை பாதுகாத்தனர். திமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிய பிறகே அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற கோரிக்கை வைத்தோம்.
இன்று மக்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கை உள்ளது. பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.