தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ராஷ்மிகா மீது அடிக்கடி அவருக்கு எதிராக டிரோல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ராஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது. சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறர்கள் என தெரியவில்லை. என்னை வளரவிடாமல் தடுக்கின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும், அமைதியாக இருங்கள் என அவர் கூறியுள்ளார்.