Thursday, February 19, 2026

“சொந்த வீட்டிலேயே துன்புறுத்துறாங்க” கண்ணீர் விடும் விஷால் பட நடிகை

தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ திரைப்படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் வேலைக்கு ஆட்களை கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களை திருடி சென்றதாகவும் அவர் வேதனையுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related News

Latest News