அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடகோவை மத்திய உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வானதி சீனிவாசன் இன்று (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : மத்திய அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல்படி, அமைக்கப்பட்டு உள்ள இந்த கூட்டணி மிகச் சிறப்பாக செயல்படும். இக்கூட்டணி திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
தொகுதி வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் நான் பேசிய வீடியோவை கொடுங்கள் என எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். ஆனால் அதைகூட கொடுக்கவில்லை. நான் பேசும் வீடியோவை எடிட் செய்யும் எடிட்டருக்கு ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்க வேண்டும்.பேரவை தலைவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கூறியுள்ளார்.