மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, உடல் பருமன், பலவீனம் போன்றவை பெரும்பாலும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றன. நம் உடலின் ஒவ்வொரு செயல்பாடும் ஹார்மோன்களால் நுணுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், நம்மால் தினமும் செய்யப்படும் சில சாதாரண பழக்கங்கள், இந்த ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும்.
வெறும் வயிற்றில் காபி குடிப்பது
பலரும் காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது உங்கள் உடலில் கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது. இதனால், உங்கள் இரத்த சர்க்கரை குறைந்து, இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும்.
காலை சூரிய ஒளியை தவிர்ப்பது
காலை நேரத்தில் இயற்கை சூரிய ஒளி நம் உடலில் ஹார்மோன் சமநிலையை சீராக்கும் முக்கிய காரணி. இது மெலடோனின் மற்றும் கார்டிசோல் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. காலை சூரிய ஒளியை தவிர்ப்பது தூக்கத்தின் தரத்தையும், பிற ஹார்மோன்களின் சுரப்பையும் பாதிக்கும்.
அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது
தூங்குவதற்கு முன் மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவது, உங்கள் மூளையில் “இன்னும் பகல் நேரம்” என்று தவறான சமிக்ஞை அனுப்புகிறது. இது மெலடோனின் சுரப்பை குறைத்து, தூக்கமின்மை, இன்சுலின் எதிர்ப்பு, எடை அதிகரிப்பு, PMS, PCOS, தைராய்டு சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
மன அழுத்தம்
எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பது, உங்கள் உடலில் கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, பிற ஹார்மோன்களை சமநிலையற்றதாக்கும். இதனால், தைராய்டு குறைபாடு, தூக்கமின்மை, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
உங்கள் தினசரி பழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம், ஹார்மோன் சமநிலையை பாதுகாத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை எளிதாக பெறலாம்.