Tuesday, February 17, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த கார் டயர் வெடித்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் மதுரை நோக்கி பயணம் மேற்கொண்டார்.

அப்போது, ஆஸ்டின்பட்டி பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, மு.க ஸ்டாலின் பயணம் செய்த காரின் டயர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.

சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் கார் சென்றுகொண்டிருந்த நிலையில் இந்த டயர் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்தில் முதலமைச்சருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக அவர் வேறு ஒரு காரில் ஏறி பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News