விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், தங்களது உடைமைகளில் சில பொருள்களை தெரியாமல் கொண்டு வந்துவிடுவார்கள். விமான நிலைய சோதனையின்போது, அவை பறிமுதல் செய்யப்படும்.
இப்படி பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்கு மும்பை விமான நிலைய அதிகாரிகள் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் நடத்திய அதிரடி சோதனையில், கிடைத்தத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் 15 பேர், தாங்களாக வேலையை விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.