ஜட்டி மட்டுமே உடுத்தி ஓட்டுப்போட வந்த இளைஞர்கள்

221
Advertisement

https://www.instagram.com/p/CdzSGTzPMn2/?utm_source=ig_web_copy_link

வாக்களிக்கும் மையத்துக்கு ஜட்டி மட்டுமே உடுத்தி வந்த இளைஞர்களின் புகைப்படம்
இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 21 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான
கன்சர்வேடிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி
நடந்தது. இந்தத் தேர்தலின்போது பட்ஜி ஸ்மக்லர் என்ற பெயரில் பிஆர் நிறுவனம் ஒரு தகவலைப்
பதிவிட்டிருந்தது.

அதில், சக ஆஸ்திரேலியர்களே…தேர்தல் மிகவும் சூடாக இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள்
யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், பேன்ட் அணியாமல்
வாக்களிக்கும் உங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள்
விரும்புகிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட பல இளைஞர்கள் ஜட்டி மட்டுமே அணிந்து வாக்கு மையத்துக்கு வந்து
தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட அவர்களின் புகைப்படம்
இணையத்தில் பகிரப்பட்டுத் தற்போது அனைவரையும் கவர்ந்துவருகிறது.

இந்தத் தேர்தலில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தொழிற்கட்சித் தலைவரான அந்தோணி
அல்பானீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் பிரதமர் பதவி வகிப்பார்.