பொதுவாகவே அன்றாடச் செலவே ஒரு நெருக்கடி தான் , கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதித்தது என்றால் பல தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து குற்றசாட்டு வைத்து தொடர்ச்சியாக பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , ஒரு நபர் மட்டும் இந்தச் சிக்கலை தீர்க்க புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
சைமன் என்ற பெயர் கொண்ட அவர் வேலை செய்யும் நிறுவனம் தனுக்கு வாடகைக்கு போதுமான பணம் தரவில்லை என்று கூறி தற்போது பெரும் வைரலாகிவிட்டார். TikTok-ல் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், சைமன் தனது அலுவலக அறைக்குள் தனது உடைமைகளை வைப்பதைக் காணலாம். அலுவலகத்தில் தனது வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்கான ஃபாலோயர்களையும் அவர் அதிகப்படுத்தியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது சக பணியாளர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் அதனால் அலுவலகத்தில் அமைதியாக வாழ முடிகிறது என்றும் மற்றோரு வீடியோவில் சைமன் கூறிவந்தார்.ஆனால் காலம் செய்த கொடுமையால் நான்காம் நாளே தனது அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளர்.மேலும்,இது குறித்து இந்த வேலைப் போக வாய்ப்புள்ளது அல்லது நல்லதும் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் நிறுவனத்தலைவரைப் பொருத்தது எனக் கூறியுள்ளார் சைமன்.