மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 வயது சிறுவன் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிக்குமாறு கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அந்த இளைஞரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.