சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூ ஏர், உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அசாம் மாநிலம் பிர்னிஹட், பஞ்சாப் மாநிலம், முல்லன்பூர் , பரிதாபாத், லோனி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா உள்ளிட்ட 13 இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசடைந்த நாடுகள் பட்டியலில், கடந்த 2023-ல் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.