77 வயதில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பயின்று வரும் அதிசய மனிதர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
இதுதொடர்பாக ட்டுவிட்டரில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பிரேசில் நாட்டில் வாழும் ஒரு முதியவர் புத்தகம் வாசிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள முதியவரின் பேரன் கூறும்போது,
என் தாத்தாவுக்குத் தற்போது 81 வயதாகிறது. அவர் தனது 9ஆவது வயதில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகத் தொடங்கினார். ஆனாலும், பள்ளிக்குப் போக வேண்டுமென அடிக்கடி எங்களிம் சொல்லத் தொடங்கினார். அதனால், தாத்தாவின் 77 ஆவது வயதில் அவரைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம்.
இப்போது தினமும் பல மணி நேரம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்து வருகிறார். கல்வி பயில்வதைக் கைவிடக்கூடாது என தாத்தா எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் என்று தாத்தாவின் பெருமையைப் பேசுகிறார்.
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாகியுள்ளது இந்த தாத்தாவின் கல்வி ஆர்வம்.