விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தில் விஜய் செலுத்த வேண்டிய வாக்கை வேறு ஒருவர் வாக்களித்திருப்பார். இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை ஏழு மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 -பூத்தில் பரிதாபேகம் என்பவர் கணவர் ஜாபருலாவுடன் வாக்கு செலுத்த வந்தனர்.
கணவன் வாக்களித்த நிலையில் பரிதாபேகம் வாக்கு செலுத்த சென்றபோது, ஏற்கனவே வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர் முகவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார். கணவனுடன் வாக்களிக்க தற்போது வந்துள்ளேன் எனது வாக்கை மற்றவர்கள் எப்படி வாக்களிக்கலாம் என வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு குற்றச்சாட்டு வைத்தார்.
தொடர்ந்து முறைகேடுகளை கண்டறிந்து மீண்டும் வாக்களிக்க வழிவகையில் 49-0 பயன்படுத்த செய்யுமாறு கூறினார்,அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி தேர்தல அலுவலர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். வாக்களிக்க வந்த பெண்ணின் ஓட்டு மற்றவர்கள் வாக்களித்த சம்பவம் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.