Friday, August 8, 2025
HTML tutorial

சினிமா பாணியில் சாக்கடைக்
குழிக்குள் விழுந்த பெண்

சினிமா பாணியில் சாக்கடைக் குழிக்குள் விழுந்த
பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படத்தில்
சாலையோரத்தில் உள்ள மூடப்படாமல் உள்ள சாக்கடைக்
குழிக்குள் வீவேக் விழுந்துவிடுவதுபோல நிஜத்திலும் ஓர்
அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம், பாட்னா நகரில்தான் இந்த அதிர்ச்சி
சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்
பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெண் ஆட்டோ ரிக்க்ஷா ஒன்றின்
பின்னால் போனில் பேசிக்கொண்டே செல்கிறார். ஆட்டோ
சென்றதும் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ஒரு
சாக்கடைப் பள்ளம் மூடப்படாமல் உள்ளதைக் கவனிக்காமல்
அதனுள் விழுந்துவிடுகிறார்.

என்றாலும், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்களால் ஆழமான
வடிகாலில் இருந்து அந்தப் பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்..

நமாமி கங்கை திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட
பள்ளங்கள் சில இடங்களில் மூடப்படாமல் உள்ளன. அதனால்
இந்த விபத்து ஏற்பட்டிருந்தாலும், நடந்துசெல்பவர்கள் முதல்
வாகனங்களில் செல்பவர்கள் வரை பலர் செல்போனில் பேசிக்
கொண்டே செல்வதால் கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற
விபத்துகள் ஏற்படுகின்றன. என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாலையில் நடந்துசென்றாலும் வாகனங்களில் சென்றாலும்
கவனத்துடன் செல்லவேண்டும் என்பதையே இந்த விபத்து
உணர்த்துவதாக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News