1 டாலர் பவுண்டுக்கு விமானத்தை வாங்கிய பெண்

424
Advertisement

பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கொடுத்த பழைய விமானத்தைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சுசன்னா ஹார்வி. இவர் அங்குள்ள கோட்ஸ்வோல்ட்ஸ் என்னும் தனியார் விமான நிறுவத்தின் நிர்வாகியாக உள்ளார்.

சமீபத்தில், பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஜெட்டுக்குச் சொந்தமான நெகஸ் 747 என்ற விமானத்தை வெறும் 1 டாலர் பவுண்ட் தொகைக்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளார். அந்த ஆச்சரியத்திலிருந்து வெளிவரும் முன்பே, அதனை விருந்தினர் மாளிகையாக்கித் திகைக்க வைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஓய்வுபெற்ற இந்த விமானத்தை வாங்கிய சுசன்னா, 500 டாலர் செலவழித்து 14 மாதங்களுக்குப் பிறகு, அதனை வருவாய் ஈட்டித்தரும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். அதில், பார்ட்டி ஹால், டான்ஸ் ஹால் என்று அனைத்து வசதிகளும் உள்ளன.

அந்த விருந்தினர் மாளிகையை ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து 300 டாலர் என்கிற விகிதத்தில் வாடகைக்கு விட்டு கைநிறைய சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.
வித்தியாசமாக சிந்தித்த சுசன்னா, இன்று வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்து பல பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

புதிய எதிர்காலத்துக்குத் தயாராகிவிட்டது ஓய்வுபெற்ற விமானம்…. மனிதர்களும் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டோம் என்று கவலைப்பட வேண்டாம். மனதை மாற்றி புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து உற்சாகத்தோடு வலம்வாருங்கள்…வளமான வாழ்க்கைக்கு வித்திடுங்கள்.