ராணிப்பேட்டை அருகே இரவு நேரங்களில், நண்பர்களுடன் செல்ஃபோனில் உரையாடுவதை கண்டித்த கணவன் மீது மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர், சுமை தூக்கும் தொழிலாளி சுரேஷ். இவரது மனைவி அபிராமி, தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி இரவு நேரங்களில் அதிகமாக செல்போனில் சில நபர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுரேஷ், மனைவி அபிராமியை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த அபிராமி, நள்ளிரவில் சுரேஷ் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார்.
சுரேஷின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம் பாறை மருத்துவமனையில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.